Saturday 14 January 2017

கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து


ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும்.  குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு  டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.
ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில்  கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல்
இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு தலையில  நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான  அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது  கொதிச்சு அடங்கினதும் ஒரு  டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.
குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு  தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும். மார்கழி  பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2  பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில்  வெளியாகிவிடும்.

No comments:

Post a Comment