Sunday 15 January 2017

கடுக்காய்


அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் “கடுக்காய்” கண்டு காணாமல் போகும்

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

‘தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது ‘பதார்த்த குண சிந்தாமணி’ நூல். ‘அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடுக்காயைஉபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .

திருவாரூர் வட்டம் திருகாரயில் கோவிலுள் உள்ள விநாயகர் கடுக்காய் விநாயகர் எனப்படுவார். வணிகர் ஒருவர் சாதிக்காய் மூட்டைகளை ஏற்றி வரும் போது விநாயகர் சிறுவன் போல் வந்து என்ன மூட்டை எனக் கேட்க சிறுவனை ஏமாற்ற நினைத்த வணிகன் கடுக்காய் என்று கூறினான். மூட்டைகள் அனைத்தும் கடுக்காய்களாயினவாம்.வணிகன் மனம்
திருந்தி வேண்டிய போது விநாயகர் முன்போல் சாதிக்காய்களாக மாற்றினார்.

சாதிக்காய்களை விட விலை மலிவாய் இருந்தாலும் குணத்தில் மிகவும் ஏற்றமுடையது கடுக்காய்.
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுகாய்
ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டுவர நரை திரை மூப்பு இன்றி இள்மையோடு வாழலாம் என்கிறது சித்த மருத்துப் பாடல் ஒன்று.


கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில் மேல் தோலும் கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன் படுத்தக்கூடாதவை. கடுக்காய் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளிலும், காதி கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கிறது. கடுக்காயின் சதைப்பற்றான மேல் தோலை இடித்துத் தூள்செய்து வைத்துக் கொண்டு, மாலை அல்லது இரவு வேளைகளில் அரை ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ, பாலிலோ கலந்து அருந்தலாம். வாயிலும் ,தொண்டையிலும், இரைப்பையிலும் ,குடலிலும் உள்ள ரணங்களை ஆற்றிவிடும் வல்லமை பெற்றது. அது மட்டுமின்றி பலசிக்கல்களை ஏற்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.பசியைத்தூண்டி,ரத்தத்தை சுத்தப்படுத்தி, வாதம் பித்தம்,கபம் ஆகிவற்றால் வரும் ஏராளமான நோய்களைப் போக்கும்.ஊட்டத்தை ஊட்டி இளமையை நீடிக்க வைத்து மிடுக்கோடு வாழவழி செய்யும்.

கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்
கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து.

என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப் புகழ்கிறது. ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்

கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில் மேல் தோலும் கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன

No comments:

Post a Comment